வாழ்வின் ஒளிவிளக்கு

..."" வாழ்வின் ஒளிவிளக்கு ""...

அறியாமையை அகற்றி
தெளிவான பாதையை
முறையாகவே சொல்லி
உங்களின் வாழ்வினை
நிலைபெற செய்யும்
ஆசிரியர் என்கின்ற
இருளின் ஒளிவிளக்கு !!!

நிற்கும் இடம் நின்று
உங்கள் நிலைகளை
உயர்த்தும் ஏணிப்படிகள்
பட்டங்கள் பெற்று வாழ்வின்
உச்சமே நீ போனாலும் தன்
மார்தட்டியே மகிழும் இவன்
என் மாணவனென்று !!!

அண்ணாந்து பார்த்திட
நீ எத்துணை உயரிய
பதவியில் இருப்பினும்
நாட்டையே ஆளுகின்ற
பொறுப்புகள் இருப்பினும்
அனைத்துக்கும் காரணம்
ஆசிரியரின் நற்க்கரம் !!!

கல்வியினை கற்ப்பிப்பவர்
மட்டுமே ஆசிரியறல்ல
நீங்கள் கற்றுக்கொள்ளும்
தந்தையோடு தாயும்
முதுமையின் அறிவுரையும்
இயற்கையின் வழித்தடமும்
அனைவருமே ஆசிரியரே !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (11-Apr-15, 11:28 am)
பார்வை : 4972

மேலே