என் தோழனே …………

அரசாங்கம் என்னும் வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாதப் பலர் இருப்பதை
எண்ணி வருத்தப்படவில்லை
அரசாங்கம் என்னும் வார்த்தையை
வாசிக்கத் தெரியாத சில அரசியல்வாதி இருப்பதை
எண்ணி வருத்தப்படுகிறேன்

வங்கிகள் படித்தவனை
வரைமுறையின்றி கடனாளிகளாக மாற்றுவதை
எண்ணி வருத்தப்படவில்லை
படித்தப் பட்டப் படிப்பை
வேலைத்திறனாக்க இயலாத இளைஞனை
எண்ணி வருத்தப்படுகிறேன்

வன்முறையை எதிர்த்துப்
போராடாதவர்களைப் பற்றி எள்ளவும்
எண்ணி வருத்தப்படவில்லை
பக்கத்து வீட்டில் நடக்கும்
அநியாயத்தை தட்டிக்கேட்காமலிருக்கும் சமுதாயத்தை
எண்ணி வருத்தப்படுகிறேன்

இனி வருத்தப்படப்போவதுமில்லை
எதற்கும் கவலைப்படப்போவதுமில்லை
எவருக்காகவும் காத்திருக்கப்போவதுமில்லை
எருதுகள் இன்றி களைகளை அகற்ற
எமனாக உருமாருகிறோம்

அவற்றில் சில ……….

தரமற்ற அரசியல்வாதிகளை
தரைமட்டமாக்க உழைப்போம்
கல்வியை வியாபாரமாக்கும் களவானிகளை
கல்லறை வரை அழிப்போம்
மதுயின்றி ஒரு வாழ்வை வாழ
மானிடனாக பிறப்போம்
உறுதிமொழியும் எடுப்போம்
உண்மையாக வாழ்ந்திட வா
என் தோழனே ………….!

எழுதியவர் : ராஜா (11-Apr-15, 2:26 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 103

மேலே