இப்படி ஏன் வர்ணனை

மதியார் தலை பதித்து
மதிமுகம் அழைத் தெடுத்து
மாற்றங் கால் படாத மனம் கொண்டு
அழகை பேச்சில் மறைத்து
உரையாடல் குறைத்து தாழ் பதித்து பேசும் மழலை !

குணக் குழந்தை குரல் வளையில் தண்டவமெடுத்து
தலைக் கணத்தை தரையில் பதித்து
பூமிப் பாரம் தராக் கவிதை எழுதி
நடவா நடக்கும் அதிசயத் தமிழச்சி !

மெல்லின இசை ஒன்று வார்த்ததைகளில்
தடுமாறி விழுந்து
தண்ணீரில் விழுந்த கல் துண்டாய் காதில் பாய்ந்தன !

கண் பார்வை கண்ட
இருள் ஒளியின் நடுவில்
தலைசாய்த்த உருவங்கள் இரண்டு
கண்ணில் பார்வை பாதையில் நடந்து வருகின்றன !

அதி நாவீன தொழில் நுட்பம் கொண்ட
கருவியும் கூட
உன் கண் சிமிட்டலுக்கு முன்னால்
பனிப் பூவாய் மாறும் !

தமிழ் வார்த்தைகளும் தாய்ப்பாலும்
கரைத்தெழுந்து கரைபடா கை வண்ணம் கண்டு
வடித் தெழுக்கப்பட்ட
கற்பனை எல்லை தாண்டிய சிலை தானடி நீ !

புறங்கடல் எல்லையில் நின்று
தொடுவானத்தின் எல்லைத் தாண்டி
உயர மராத்தி உச்சி இலையின் நுனியில்
நின்று ஒற்றைக் காலில்
எழுத்தாணியால் எழுதப்பட்ட கவிதை நீ !

கவித்தாயின் உச்சியில் அழகை வாங்கி
கையால் வரம் வாங்கி
வர்ணனை கொண்டு வரைந்த இயற்கை தென்றல் நீ !

நடுப்பாலைவன உப்புப் பாலை பாதை
என மன அறிவது போல தவறான பாதையில் செல்கிறேன் !

தன்மை குணத்தோடு ஒற்று
மெய் உயிர் மெய்யின் ஒற்று
உன் பேச்சு மழலையின் ஒற்று !

எழுதியவர் : வேல்முருகானந்தன். சி (17-Apr-15, 10:49 am)
பார்வை : 211

மேலே