முற்று இல்லாப் புள்ளி

படர்க்கை மனம் ஒன்று
முன்னிலை பெற்று
தன்மையாக மாறி வாசம் வீச
காற்றுடன் மானூரத் திரிந்து
கண்ணின் பார்வையில் பாதை அமைத்து
சர்க்கரைத் தூவல் கண்ட
எரிமலை ஒன்று வடித்த செல்வக் குழந்தையடி நீ!

புவித் தூறல் ஒன்று
காற்றுடன் உள்ளூரக் கலந்து
அமில மழையாய் மாறி நிலத்தில் பதிர்த்தெலுந்து
இர்ல்ட்டை எழுத்து ஒன்று
ஒற்றை குணத்தை பிரிந்து
அர்த்தமற்ற வார்த்தையை கேட்டெழுந்தது !

உச்சி மலை மரக் கடைசி இல்லை ஒன்று
தொலை தூரக் காதலியை தேடி
அலைந்திரிந்து கடைக் கோடி சென்று
அங்கிருந்து நடுக்கடல் அடியாள பவளச்சாவி
மழை துளி பட்டு
உருவெடுத்து நவரத்தின தேவதை அவள் !

பனிச்சாரல் ஒன்று தரையுடன் தமிழ் வெள்ளம்
பொழிந்து - தாய்மை வரம் கொண்ட
என்னை சாரல் பணியை தலைத் தெழுந்து
மழை கொண்ட சரிவு மழையாய்
தன்னிலை இழந்து
உறவா கொண்ட அன்பாய் மழை பொழிகிறது அவளது கண்ணில்
என்னை பிரிந்த கணத்திற்காக !

குவியக் காதல் ஒன்று
குணக் காதலாய் மாறி

மூளை கேளா காதல் ஒன்று
மனம் கேளா காதலாய் மாறி

பாறைக் காதல் ஒன்று
பனிப்பாறை காதலாய் மாறி

கண் கொண்ட காதல் ஒன்று
கண்ணீர்க் காதலாய் மாறி

கண்ணீர் காதல் ஒன்று
கவியழகு காதலை மாறி

பூமிக்கு வரம் அளிக்க உருவெடுத்தவள் நீ !

எழுதியவர் : வேல்முருகானந்தன். சி (17-Apr-15, 11:39 am)
பார்வை : 73

மேலே