அம்மா

குழந்தையாய் பிறந்து
துரும்பிற்கு பயந்து
தாய்மடியில் படுத்து
தந்தைகரம் பிடித்து
மணவாளன்
மாலையேந்தி
மஞ்சத்தில்
நாணலாகி
கருவை
உருவேற்றி
முள்ளுக்கு
பயந்தவள்
முழுவுருவை
சுமந்து
"அம்மா" அலறலில்
அம்மாவாய் மாறியவள்...

எழுதியவர் : ஏஞ்சல் (17-Apr-15, 8:49 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
பார்வை : 149

மேலே