தாலி அறுப்புப் போராட்டம்

அன்பே

தாலி அறுப்புப்
போராட்டத்தின்
அந்தக் கட்சியில்
நீ
இந்தக் கட்சியில்
நான்

தேவையில்லை
என்கிறாய்
நீ
தேவைதான்
என்கிறேன்
நான்

எதற்கு வம்பு

இருவருமே
ஜெயித்துவிட ,
பேசாமல்
நீயே எனக்குத்
தாலி கட்டிவிடேன்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (19-Apr-15, 9:12 am)
பார்வை : 194

மேலே