சொல்லி விடு

தனிமைஎன்னும்
குகைக்குள் என்னை
பிறரண்டமுடியாவண்ணம்
சிறை வைத்த
மந்திரவாதியே
அது சரி
ஏழு கடல்
ஏழு மலை தாண்டி
என் காதலை
எந்தக் கிளியின்
உடலுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறாய் .

எழுதியவர் : வசுந்தரா (19-Apr-15, 11:05 am)
Tanglish : solli vidu
பார்வை : 182

மேலே