தாலி - சி எம் ஜேசு

ஒழுக்கத்தின் அடையாளம் தாலி - உண்மை
ஊடலின் கூடல் தாலி

உறவுகளின் அகமகிழ்வு தாலி - இரண்டு
உள்ளங்களின் இணைப்பு தாலி

புரிதலில் அதிசயம் தாலி - வாழ்க்கை
பூரிப்பின் நிம்மதி தாலி

சட்டங்கள் இல்லாமல் இரு துருவங்களை
சமனாக்கும் சக்தி தாலி

வாழ்க்கையை அளிக்கும் தாலி
வாழ்க்கையின் நன்மை இன்பம் தாலி

மஞ்சளில் முடிந்து மஞ்சளின் நிறத்தினில்
நெஞ்சம் நிறைக்கும் நிம்மதி தாலி

மறுக்க முடியாத தாலி மறக்க முடியாத தாலி
வாழ்க்கையின் அன்பின் சின்னம் தாலி

இணைக்க முடிந்த தாலி பிணைக்க முடிந்த தாலி
பிழை வராமல் வாழ முன்னோரின் எண்ணம் தாலி

எழுதியவர் : சி .எம் .ஜேசு (19-Apr-15, 11:22 am)
பார்வை : 104

மேலே