வெற்றி எனும் எட்டாக்கனி
வாழ்க்கை என்னும் போர்க்களம்
வெற்றியடைய படையெடுத்தேன்
வெற்றி என்னைவிட்டு விலகிச்சென்றது
விடாமல் துரத்தினேன் முடியவில்லை
செல்லும் வழியறியாது தவித்தேன்
கசினி முகமது கூட 17 முறைதான் படையெடுத்தான்
நான் வெற்றிபெற தினம் தினம் போராடினேன் முடியவில்லை
வெற்றிக்கனி புளிக்க ஆரம்பித்துவிட்டது
நரிக்கு திராட்சை புளித்ததுபோல்!
என் நிழல்கூட என்னை இப்படி தொடர்ந்ததில்லை
தோல்வி என்னை தொடர்வதுபோல்...
என்னை விட்டுவிலகி செல்லும் வெற்றியைவிட
என்னை விடாமல் தொடரும் நண்பனே (தோல்வியே ) மேல்
-நாண்பேன்டா