நிலவென்னும் தோழி

ஆஹா நிலவே!!

இத்தனை நாளும்
உணராமல் போனேனே
உன் இனிய நட்பை..

அன்றொரு நாளும்
ஆனந்த நினைவினில்
ஆகாசக் கோட்டை
கட்டிக் கொண்டிருந்தேனே
அப்போதும் வந்தாயே

மீண்டும் ஒருநாள்
உன் ஒளியில்
என்னவன்
தோள் சாய்ந்துக்
கிடந்தேனே
அப்போதும் வந்தாயே

இப்படி
நீ வரும் பொழுதிலெல்லாம்
உன்னையும்
உலகத்தையும்
மறந்துப் போனேனே
எனை மன்னிப்பாயோ

இப்போது
உன் நட்பினை
யாசித்து நிற்க்கிறேன்
தருவாயோ

தனிமையில்
தவித்திருக்கும்
என்னிடம்
நாம் சேர்ந்திருந்த
நினைவுகளை
நினைவுக்கூர்ந்து
சொல்வாயோ
பொன் நிலவே..

எழுதியவர் : மகாலட்சுமி (21-Apr-15, 10:00 am)
சேர்த்தது : Mahalakshmi
பார்வை : 70

மேலே