இது எந்த வகை அவமானமோ

நல்லா குடிச்சிட்டு
வெள்ள வேட்டி
மஞ்சளாக
வீதியில
விழுந்து புரண்டு
அரை போதைல
தள்ளாடிட்டு

"ஏய் நடு ரோட்ல
பணத்த கேட்டு
அவமான படுத்துரியாடீ (அழகு தமிழ் )"

கையில புள்ளயோட
நிக்கற பொண்டாட்டியை
பார்த்துக்
கேட்டுக் கொண்டிருக்கும்
குடிமகன்களின்
மான அவமானம்
எதைச் சார்ந்ததாய்
இருக்கும்??!?!!

எழுதியவர் : மகாலட்சுமி (22-Apr-15, 12:16 pm)
பார்வை : 64

மேலே