தொல்லைகள் இல்லை

இங்கேதான்..
இங்கேதான்..
மனிதர்கள் வாழ்ந்தார்கள்..
இப்போது யாருமில்லை !
..
வண்ண வண்ணமாக
சட்டைகள் அணிந்து
சின்னங்கள் ஏந்தி
சின்னா பின்னம்
ஆனார்கள்..மனிதர்கள் !
..

ஒருவரது அழிவில்
இன்னொருவர் வளர்ச்சி..
இப்படி வளர்ந்தவர் அழிவது
அப்போது அன்றாட நிகழ்ச்சி..

..
நிழலுக்கும் காற்றிற்கும்
அவசியம் இல்லை
என்றே அழித்தார்கள்
முன்னோர் வைத்த மரங்களை..
..
காடுகள்..கொன்றார்கள்..
கழனிகள்.. அழித்தார்கள்..
நீருக்கும் வேலியிட்டு..
அண்டை மாநிலங்கள் அழித்தார்கள்..!
..
உன் மதமா..என் மதமா
நீயா..நானா..என்று கேட்டு
அழித்தார்கள்..அழிந்தார்கள்..
இங்கேதான் மனிதர்கள் வாழ்ந்தார்கள்!

..

என்றெல்லாம் எண்ணியபடி
வெறுமையாய்
சுற்றிக் கொண்டிருந்தது ..
பூமி..!

ஆண்டு..கி.பி. 2100
.....

இப்போது..
இந்த பூமிப் பந்து
எதற்குமே உதவாது ..
நமக்கு ..
போவோமா..
என்றபடி
அயல் கிரக வாசி
எழும்பிப் பறந்தான்
விண்கலத்தில்..

ஆண்டு: கி.பி. 2200
..
இனி....
கி.மு. ... கி. பி..
எதுவுமில்லை..
..
தொல்லைகளும்
எதுவும் இல்லை!

எழுதியவர் : கருணா (23-Apr-15, 5:02 pm)
Tanglish : thollaigal illai
பார்வை : 91

மேலே