புத்தகம்

உலக புத்தக தினம்

புத்தகம் படி……
அறிவின் கூர்மை அறியவேண்டுமா…?!
அறத்தின் பெருமை புரியவேண்டுமா…?!
தத்துவ ஞானம் வளர வேண்டுமா…?!
தனித்துவமாய் நீ தெரிய வேண்டுமா….?!
புத்தகம் படி…..
 
வால்மீகி படித்தால் வாழ்வு சிறக்கும்…
வாஸ்த்யாயனரில் வசந்தம் கிடைக்கும்….
கார்ல் மார்க்ஸ் கொஞ்சம் முறுக்கேற வைக்கும்….
காந்தியும் படி, சாந்தி கிடைக்கும்……
 
ஷேக்ஸ்பியரால் உன் சிந்தை தெளியும்,
செகுவோரா வில், வீரம் பிறக்கும்…..!
சுஜாதா படித்தால் அறிவியல் புரியும்
சுரதா எழுத்தில், உவமைகள் தெரியும்
 
வேர்ட்ஸ் வொர்த்தில், உன் இலக்கியம் வளரும்
வாலியைப் படித்தால் இலக்குகள் புரியும்……!!
அலெக்ஸாண்டரின் துணிவைப்படித்தால்……நம்
அகிலனின் சித்திரப் பாவையும் படி…..
 
ஜெயகாந்தனின் சித்தாந்தம் படித்தால்…
கண்ணதாசனின் வேதாந்தமும் படி……!!
வைரமுத்துவில் வார்த்தையைப் படி
வாரியார் சொல்லில் வாழ்க்கையைப் படி….!!
 
கல்கி சொல்லும் வரலாறும் படி....
கவனமாய் கொஞ்சம் கார்க்கியும் படி
புதினம் அறிய மணியனைப் படி
புதிதாய்த் தெரிய மதனையும் படி
 
எதுவரை படிப்பு?, என்ற கேள்விக்கு,
“இருமுலைத் தூரம்” என்று சொன்னானாம்
பெருங்கவி காளிதாஸ்…. அன்று…..
இணையம் வந்தபின் எல்லை அழிந்தது…..
இல்லை யெனாமல் எல்லாம் கிடைக்குது…….!

இதயம் சிரிக்கும் எல்லாம் படி.......
இணையம் சிலிர்க்கும் கதையும் படி.....
 
படிப்படியாய் நீ படிக்கத் தொடங்கு…..உன்
பண்புகள் வளரும் நூறு மடங்கு…….!!
 
வரைமுறை இன்றி படிக்கத் தொடங்கு….உன்
தலைமுறை வாழும், பண்பிற் சிறந்து…..!!
 

எழுதியவர் : இரவி (24-Apr-15, 3:49 am)
சேர்த்தது : இரவி
பார்வை : 95

மேலே