உன்னால்

அலைகளுக்கும் ஆசையடி, உன் பாதங்களை தொட்டு பரவசமடைந்து விட, கடற்கரையில்...

பூக்களுக்கும் பொறாமையடி, உனதருகில் தன் வாசம் குறைந்துவிட, உன் கூந்தலில்..

மழைத்துளிகளுக்கும் மன ஏக்கமடி, மௌனமாய் உனை நனைத்து விட, திடீர் சாரலில்...

காதலுக்கும் உன் மேல் காதலடி, உனதழகில் உறைந்துவிட, எனதருகில்...!

எழுதியவர் : பாலகுமார் (24-Apr-15, 8:35 pm)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : unnaal
பார்வை : 93

மேலே