மீண்டும் வருமா

ஒற்றையடி
பாதையின்
முடிவிடத்தில்
ஊர்ந்துகொண்டிருக்கும்
ஆமையின்
கால்களில்
ஒட்டியிருக்கலாம்!!
பொக்கைவாய்
கிழவியின்
பழமைகளும்
அத்தை மடி
தாலாட்டுக்களும்!!
அதோ தூங்கி கிடந்த
முயலொன்றின்
அதிவேக
ஓட்டத்தில்
புழுதி பறக்கிறது..
பட்டாம் பூச்சிகளை
தொலைபேசிகள்
படம்
பிடித்துக்கொள்கின்றன...