மிதிவண்டி நிதிவண்டி - குழந்தைப் பாடல்

குழந்தைப் பாடல்கள் என்பது தற்பொழுது அருகி வரும் இலக்கியமாகும் நாம் " நிலா நிலா ஓடி வா" என்று படித்து இன்புற்ற காலம் போய் எல்லாம் திரையிசைப் பாடல்களை பாடம் செய்து பாடுகிறார்கள். இத்தகு குழந்தைப் பாடல் இலக்கியத்தை அருக விடாமல் மக்கள் பருக விடவே எனது முயற்சி...

மிதிவண்டி நிதிவண்டி

தன்னானே தானனன்னே
காலைத்தூக்கி மேலேபோட்டு
முன்னாலே பார்த்தபடி
இருக்கையிலே அமர்ந்துகிட்டு

தில்லானே தில்லானனே
கீழேமிதி மேலேமிதி
நில்லாமல் ஓட்டிப்பாரு
மிதிவண்டிக் கிதுவே விதி

இடதுபுறம் செல்லவேணும்
இல்லையெனில் துன்பம்நேரும்
கடகடவென வேகமாக
ஓட்டுவதை நிறுத்தவேணும்

மிதிவண்டி மிதிவண்டி
இன்றைக்கேற்ற மிதிவண்டி
எதுவுண்டு இதுபோலே
இதுவேதான் நிதிவண்டி !


வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Apr-15, 4:33 pm)
பார்வை : 206

மேலே