வெள்ளரிக்காய் - குழந்தைப் பாடல்

சிறுவனுக்கு, வெயில் காலத்தில் வெள்ளரியின் அவசியம் குறித்து சொல்லுவதாய் அமைந்த குழந்தைப் பாடல்

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய்
வெயிலுக்கேற்ற வெள்ளரிக்காய்
வேனிலுக்கு ஏற்றதடா
வேலியிலே பூத்ததடா !

குளிர்பானம் உண்ணாதே
குளிர்பனிக்கூழ் எண்ணாதே
தளிர்வெள்ளரி சாப்பிடுவாய்
இன்னுங்கொஞ்சம் கேட்டிடுவாய் !

இயற்கையிலே காய்த்ததடா
இன்னல்தீர்க்கக் காய்த்ததடா
செயற்கைக்கூழ் ஏதுக்கடா
இயற்கைத்தாய் வரமிருக்க !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (26-Apr-15, 9:51 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 109

மேலே