அரிச்சந்திரர்கள்

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.
அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான்.
இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன??
யமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.
இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??
யமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன?­?
யமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்கு பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன..

எழுதியவர் : (29-Apr-15, 12:41 am)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே