வெற்றியின் துடக்கம்

..."" வெற்றியின் துடக்கம் ""...

தோல்வி !!!
நடைபயில விழும் குழந்தை
தொட்டுனை முத்தமிட்டே
எட்டெடுக்க எத்தனிக்கும்
மீண்டும் எழுந்தே நடக்க,,,

தோல்வி !!!
வளமாய் உரம்சேர்க்கும்
நீ கைக்கும் நெல்லிக்கனி
உண்டவனுக்கே வெற்றியை
பருக உன் சுவையறியும்,,,

தோல்வி !!!
வாழ்க்கையின் தூரமாய்
இருக்கின்ற வெற்றியின்
தோட்டத்திற்கு கடந்துசெல்ல
கடவு தொங்குபாலம்,,,

தோல்வி !!!
உதிர வியர்வை சிந்திய
முயற்ச்சிகள் முற்றுப்பெற
வெற்றிக்கனி எட்டிப்பறிக்க
தொட்டு செல்லவேண்டும்,,,

தோல்வி !!!
வெற்றிக்கு அடித்தளமாய்
வீடிருக்கும் எனைமிதித்து
உயரும் நோக்கில் பயணித்தால்
என்றுமுனக்கு தடையில்லை,,,

தோல்வி !!!
முட்டி முட்டி பார்க்கவேண்டும்
முடியும்வரை தொடரவேண்டும்
எட்டி நின்றே எனைப்பார்த்தால்
வெற்றியென்றும் உனக்கில்லை,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (30-Apr-15, 11:21 am)
Tanglish : Vettriyin thudakkam
பார்வை : 124

மேலே