பாபா ராம்தேவ் என்ற போலி சாமியார் பாஜக வின் ஆர்எஸ்எஸ் - ன் நெருங்கிய கூட்டாளி

பாபா ராம்தேவ் என்ற போலி சாமியார் பாஜக வின் / ஆர்.எஸ்.எஸ். - ன் நெருங்கிய கூட்டாளி....!
ஆண் குழந்தைக்கான லேகியம் விற்றுக் கொண்டிருக்கும் பாபா ராம்தேவ்.....ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட புத்ரஜீவக் பீஜ்
( ஆண் குழந்தையை பெற்றுத் தரும் லேகியம் ) பாபா ராம் தேவ் ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது.
பாபா ராம் தேவ் ஹரியானா மாநிலத்தின் விளம்பர தூதுவராகவும் பிஜேபி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் ரீதியாகவும் இது மக்களை ஏமாற்றும் புரட்டு வேலை.
பாராளுமன்றத்தில் ஜனதா தள் மூத்த தலைவர் தியாகி தான் ஒரு மருந்து கடையில் இந்த லேகியம் வாங்கியதாக அனைவருக்கும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் அந்த மருந்து பாக்கெட்டை சுகாதார மந்திரி நத்தாவிடம் அளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும் போது 'ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள் கொடுமை படுத்தப்படும் சூழலில் அதனை தடுக்க வேண்டிய அரசு அதற்கு எதிர் மறையாக செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது' என்றார்.
இந்த மூடப்பழக்கத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
மேலும் இவர் திவ்யா, பதஞ்சலி மற்றும் தாபர் என்ற கம்பனிகளின் பெயர்களில் நூற்றுக்கணக்கான மருந்துகளை தயாரித்து கொண்டிருக்கிறார்...இந்த மருந்துகளின் தயாரிப்பும் திறனும் இதுவரை சோதித்துப் பார்த்திருப்பார்கள்...?
இவற்றின் மதிப்பு பல பத்தாயிரம் கோடிகள் இருக்கும்...ஒரு சாமியாருக்கு ஏன் கம்பனி...? பணம்...? பங்கு மார்க்கெட் வியாபாரம்...?
ஏற்கனவே இவர் மருந்து கம்பனிகளில் இறந்து போன மனித உறுப்புகள் சேர்க்கப்படுகின்றன என்ற புகார் எழுந்தபோது தண்ணியை ஊத்தி அணைச்சுப்புட்டாங்கே.....
ஆந்திர அரசு விட்ட செம்மரம் ஏலத்தில் மிக அதிக அளவில் ஏலம் எடுத்தவர் பாபா ராம்தேவ் மற்றும் அவரின் மருந்து கம்பனி தான்...
ஒரு விசாரணை குழு அமைத்து பாபா ராம்தேவின் கம்பனிகளை ஆய்வு நடத்தி, முறைகேடுகளும் விதி மீறலும் போலி மருந்துகளும் இருப்பின்...... கைது செய்து இவரின் கம்பனிகளை சீல் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!
- சங்கிலிக்கருப்பு -