உத்தம வில்லன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா இரவி

உத்தம வில்லன் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

.
கமல் ஹாசன் ! நடிப்பு, கதை ,திரைக்கதை கமல் ஹாசன் !

இயக்கம் ரமேஷ் அரவிந்த்!

தயாரிப்பு கமல் ஹாசன் , லிங்குசாமி !


உலகில் சிறந்த நடிகர் யார் ? என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது அனைவரும் அறிந்த உண்மை . அவருக்கு அடுத்த படியாக சிறந்த நடிகர் யார் ? என்றால் கமல் ஹாசன் என்றால் மிகை அன்று.பாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர் .

களத்தூர் கண்ணமாவில் குழந்தையாகத் தொடங்கிய கலைப்பயணம் உத்தம வில்லன் வரை தொய்வின்றித் தொடர்கின்றது .கமல் ஹாசன்அவர்கள் அவருடைய அம்மாவிடம் நான் திரைபடத்தில் நடிக்க செல்லவா ? என்று அனுமதி கேட்ட போது அவர் சொன்னாராம் " நீ நடிக்கப் போகிறாயோ அல்லது கழிவறை சுத்தம் செய்யப் போகிறாயோ என்பது முக்கியமல்ல ஆனால் கமல்ஹாசன் அளவிற்கு வேறு யாராலும் கழிவறை சுத்தம் செய்ய முடியாது , நடிக்க முடியாது என்று பெயர் எடுக்க வேண்டும் ." என்றாராம் அன்னை சொன்னபடியே பெயர் எடுத்து விட்டார் கமல் .

இன்று நடிகர் திலகம் நம்மிடம் இல்லை .இன்று வாழும் நடிகர்களில் கமல்ஹாசன் அளவிற்கு நடிக்கும் நடிகர்கள் இல்லை என்றே சொல்லலாம் .உத்தம வில்லன் படத்தில் மட்டுமல்ல தசாவதாரம் படத்திலும் கமல் ஹாசன் தவிர வேறு நடிகரை கற்பனை செய்து பார்த்தால் அவர் அளவிற்கு பிறர் நடிக்க முடியாது என்பதை உணர முடியும் .

இசை ஜிப்ரான் மிக நன்று .வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் சில காட்சிகள் படத்தில் வருகிறார் .பாடல் வரிகள் அவர் எழுதியவை மிக நன்று .பாராட்டுக்கள் .நடிகர் நாசர் மிக நல்ல நடிகர், இயக்குனர் பல அனுபவம் இருப்பதால் நகைச் சுவை மன்னன் பாத்திரத்தில் சிரிக்க வைக்கிறார் .அவரது அமைச்சராக இனிய நண்பர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் நடித்து உள்ளார். அவருக்கு கமல் நல்ல நண்பர் என்பதால் நடித்து உள்ளார் .பல காட்சிகளில் வருவதால் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ள நல்ல வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி நன்கு நடித்துள்ளார் பாராட்டுக்கள் .
.

மிகச் சிறந்த இயக்குனர் பாலசந்தர் இந்தப்படத்தில் இயக்குனராகவே நடித்து மனம் கவருகின்றார் .அவர் இறந்து விட்டார் .இந்தப் படத்தில் கடைசியாக நடிக்க வைத்து தன்னை அறிமுகம் செய்த குருவிற்கு நன்றிக் கடன் செலுத்தி உள்ளார் .படத்தில் இயக்குனர் பாலசந்தர் அவர்களை பார்க்கும் போதெல்லாம் .நல்ல இயக்குனரை இழந்து விட்டோமே என்ற வருத்தும் மனதில் இழையோடுகின்றது .

படத்தின் கதை என்னவென்றால் .உண்மையான காதலர்களை உறவினர்கள் சதி செய்து பிரித்து விடுவது .இந்த நிகழ்வு பலரது வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள உண்மை என்பதால் ,படம் பார்க்கும் போது அவரவர்கள் மலரும் நினைவுகளை மலர்வித்து படம் வெற்றி பெறுகின்றது .

கமல் நடிகராகவே கதையில் வருகிறார் .அவருக்கு ஒரு காதலி. பெரிய பணக்காரார் இயக்குனர் விஸ்வநாதன் அவரது மகள் ஊர்வசியின் ஒருதலைக் காதலை நிறைவேற்ற காதலிக்கு பணம் தருவதாகச் சொல்லி விலகச் சொல்கிறார் .அவளோ பணம் வாங்காமலே விலகி விடுகிறார் .ஊரை விட்டு கேரளா சென்று விடுகிறாள்.இருவர் எழுதிய கடிதங்களையும் இருவரிடமும் சேர்க்காமல் சதி செய்தி பிரித்து விடுகின்றனர் .கருவுற்ற காதலிக்கு மகள் பிறக்கின்றாள் .ஒரு குழந்தைக்கு தாயானவளை மனைவியாக ஏற்று நல்ல கணவனாக வருகிறார். நடிகர் ஜெயராம் .மனதில் நிற்கும் உயர்ந்த பாத்திரம் .மனைவி இறந்து விடுகிறாள் . அவளது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வளர்ந்து விட்ட மகளை அழைத்துக் கொண்டு வந்து அவளின் உண்மையான அப்பாவான கமலுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் .

முதலில் உண்மையான அப்பாவை வெறுக்கும் மகள் .அவருக்கு மூளையில் கட்டி புற்று நோய் விரைவில் இறக்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் அப்பாவின் மீது பாசம் காட்டுகின்றாள் .கமலும் ஒரு தந்தையாக மகளிடமும் ,ஊர்வசிக்கு பிறந்த மகனிடமும் பாச மழை பொழிந்து நெகிழ வைக்கிறார் .

கமலுக்கு உதவியாளாராக நடித்துள்ள சின்னத்திரை பாஸ்கர் மிக நன்றாக நடித்து உள்ளார் .
புகழ் பெற்ற நடிகர் கமலுக்கு தனக்கு விரைவில் மரணம் வர உள்ளது என்று மருத்துவர் அறிவித்தவுடன் தன்னை அறிமுகம் செய்து வைத்து இயக்குனருடன் சேர்ந்து நல்ல படம் கடைசியாக நடித்து விட்டு இறக்கலாம் என்று முடிவெடுத்து .அவரை சந்திக்கிறார் முதலில் மறுக்கும் இயக்குனர் நடிகர் நாட்களை எண்ணுகிறார் என்று தெரிந்ததும் வருந்தி சமதம் தெரிவிக்க படம் எடுக்கின்றனர் .
மன்னர் காலத்து கதை சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக பாம்பு கடித்தும் ,தடியால் அடித்தும் ,தண்ணீரில் தள்ளியும் சாகாத ஒருவனை சாக வரம் பெற்றவன் என்று தவறாக எண்ணி .நகைச் சுவை மன்னர் நாசர் சாகவரம் மந்திரத்தை எனக்கு சொல்லிக் கொடு என்று சொல்ல .எதுவும் தெரியாத அவன் விழிக்க இப்படி நகைச்சுவையாக காட்சிகள் செல்கின்றன .

கூத்துக் கலைஞராக கமல் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .படத்தின் தொடக்கத்திலேயே நாயகனுக்கு மூளையில் புற்று நோய் என்று தெரிந்து விடுவதால் .படம் பார்க்கும் நாயகன் மீது ஒரு வித இரக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது . படம் பார்க்கும் போது எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக இயக்கி உள்ள இயக்குனர் நடிகர் ரமேஷ் அரவிந்த் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .கமல் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும் என்பது உறுதி .பாராட்டுக்கள் .

படித்தில் குறை ஒன்றும் இல்லையா என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது . ஒரே ஒரு குறை உள்ளது மருத்துவராக வரும் ஆன்ட்ரியாவுடனான கள்ளத் தொடர்பு காட்சியை தவிர்த்து இருக்கலாம் .படம் பார்ப்பவர்களை சங்கடப்படுத்தும் காட்சி தவிர்த்து இருக்கலாம் . புனிதமான சேவை மிக்க மருத்துவப் பணியை கொச்சைப்படுத்தும் காட்சி நெருடல் .மருத்துவர் ஆன்ட்ரியாவை நல்ல தோழியாக மட்டும் காண்பித்து இருந்தால், இரண்டு பாத்திரமும் போற்றப்படும் .நடிகைகள் ஊர்வசியும் , ஆன்ட்ரியாவும் நன்றாக நடித்து உள்ளனர் .

பத்ம ஸ்ரீ கமல்அவர்கள் ஒரு நாத்திகர் ,இன முரசு நடிகர் சத்தியராஜ் அவர்களும் ஒரு நாத்திகர். இவர்கள் இருவர் மீதும் எனக்கு மரியாதை உண்டு .காரணம் நான் ஒரு நாத்திகன். தசாவதாரம் படத்தின் விமர்சனத்தை இனிய நண்பர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் உதவியுடன் கமல் அவர்களிடம் அலைபேசியில் தெரிவித்தவன் நான் . விஷ்வரூபம் ஒலிநாடா வெளியீட்டு விழாவிற்காக மதுரை வந்தபோது நேரில் சந்தித்து உரையாடி இருக்கின்றேன்.

பத்மஸ்ரீ கமல் ஹாசன் அவர்கள் படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டி வெற்றி பெறுகின்றார் .உத்தம வில்லனும் வித்தியாசமான படம் .பொழுது போக்கும் அம்சம் உள்ள படம் .அனைவரும் திரையரங்கம் சென்று பார்க்கலாம் .நான் எந்த திரைப்படமும் திரையரங்கம் சென்று பார்த்து விமர்சனம் எழுதுவது வழக்கம் .

எழுதியவர் : வாழ்க்கை (5-May-15, 8:49 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 162

மேலே