நீரும் திருமாலும் நேர்

உள்ள வழுக்கை அகற்றும் உயர்குணத்தால்
பள்ளத்தை நோக்கியே பாய்வதனால் - துள்ளிவரும்
பாரும் வியந்திருக்க பொங்குதிரை கொண்டுவரும்
நீரும் திருமாலும் நேர்.

அழகா முருகா அழகர் மலையழகா
கள்ளழகா உன்னழகோ நூபுர கங்கையாம்
வெள்ள வழகா விளம்பு.

எழுதியவர் : சு.அய்யப்பன் (5-May-15, 9:50 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 135

மேலே