உன்னை நம்பு

இரு நண்பர்கள் ..

ஒருவன் பெயர் கோபி மற்றொருவன் பெயர் மணி

இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் கோபி என்பவன் நன்கு விளையாடும் திறமை கொண்டவன் மணியோ நன்கு படிப்பு அறிவு கொண்டவன்

கோபியின் லெட்சியம் இந்திய அளவிலான ஓட்டபந்தயத்தில் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே அவன் சிறு வயதில் இருந்து கனவு

ஆனால் அவன் கடந்த விளையாட்டு போட்டியில் நன்றாக விளையாடவில்லை என்பதால் அவன் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை ..

அடுத்த நாள் அவனுக்கு விளையாட்டு போட்டி இருந்ததினால் பயிற்சி செல்ல கடற்கரை ஓரம் சென்றான் அப்படி அவன் பயிற்சி செய்து கொண்டு இருந்த போது ஒரு அழகான சுருபம் அவனுக்கு கிடைத்தது ...

அதை அவன் வீட்டுக்கு எடுத்து வந்தான் நண்பனிடம் காமிதான் .. அது என்னவோனு தெரியல கோபிக்கு அந்த சுருபம் மேல் ஒரு நல்ல இர்ப்பு இருந்தது ..

மறு நாள் அவனுக்கு விளையாட்டு போட்டி இருந்தது காலை எழுந்ததும் அந்த சுருபத்தை பார்த்தன்
அவனுக்குள் தானாகவே ஒரு புன்கை ... இதை மணி பார்த்து கொண்டே இருந்தான்

விளையாட சென்று விட்டு விடு வந்த கோபி ... தன் நண்பனை கட்டி அணைத்து மச்சான் இன்று நடந்த விளையாட்டு போட்டியில் முதல் இடம் என்று மகிழ்ச்சியோடு சொன்னான் நண்பனிடம்... மணியோ நன்று நண்பா எல்லாம் உன் திறமை தான் என்றான் அதற்கு கோபி இல்ல மணி இந்த சுருபம் வந்த ராசி எல்லாம் நல்லது நடக்குது என்றான் மணியோ அவன் மன நிலைமையை புரிந்து கொண்டு ஆமா கோபி என்றான்

அடுத்து அடுத்து நடந்த எல்லாம் போட்டிகளிலும் கோபி தான் முதலிடம் எல்லா வெற்றியும் அந்த சுருபத்தினால் தான் என்று நினைத்து கொண்டு இருந்தான்

அதே நேரத்தில் அவன் இந்திய அளவிலான போட்டியில் தேர்வும் ஆனான் ....
எல்லாம் அந்த சுருபதால் தான் என்று நினைதான் ..

இதை புரிந்து கொண்ட மணி கோபிக்கு நன்கு பாடம் கட்ருகொடுக்க வேண்டும் என்று நீனைதான்

ஒரு நாள் மாலை மணி கடை ஓரம் சென்று கொண்டு இருந்தான் .... கோபி வைத்து இருக்கும் சுருபம் போலவே ஒரு சுருபத்தை பார்த்தான் அதை வங்கி கொண்டு வந்தான் விட்டுக்கு....

கோபி எபோதும் போல பயிற்சிக்கு சென்றுவிட்டான் மணி சுருபத்தை மாற்றி வைத்தான் .... மறு நாள் இந்திய அளவிலான போட்டி இருந்ததினால் கோபி கடினமாக பயிற்சி செய்து கொண்டு இருந்தான் ...
தாமதமாக தான் விட்டுக்கு வந்தான் ... சுருபத்தை பார்த்தன் ... நினைத்து கொண்டான் .. இது இல்லை என்றால் நான் இந்த தூரம் வந்து இருக்கவே முடியாது என்று ..

மறு நாள் காலை எப்போதும் போல சுருபத்தை பார்த்தன் விளையாட சென்றான் .. புதிய சாதனை படைத்தான் குறைந்த நேரத்தில் ..

வெற்றியுடன் வந்த கோபி .. மணியிடம் நண்பா பாத்தியா எல்லாம் இதால தான்னு சொன்னான் ... மணி சிறு புன்னகையோடு உண்மையான கோபியின் சுருபத்தை காமிதான் ... மணி எல்லாத்தையும் சொன்னான் ... கோபி புரிந்து கொண்டான் ... சுருபத்தை வெளியே விசினான் ...

மணி கோபியிடம் நண்பா ஏதோ ஒரு பொருளின் மேல் வைக்கும் நம்பிக்கையை உன் மேல் வை வெற்றி உனதே ....
இந்த வெற்றி எல்லாம் உன் கடின உழைபினால் தான் நண்பா எந்த பொருளினாலும் அல்ல நண்பா என்றான்
கோபி அதை உணர்ந்துகொண்டான் ...

இதை போல் எத்தனயோ மனிதர்கள் தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் எது எது மேலோ நம்பிக்கை வைக்கின்றனர் ....

உன்னை நம்பு
உயர்வு பெறுவாய் .......

மனதை நம்பு
மகத்தான வெற்றி பெறுவாய் ...

எழுதியவர் : காட்வின் ஆர் கே .. (7-May-15, 10:14 am)
Tanglish : unnai nambu
பார்வை : 502

மேலே