கண்ணனெனும் நற்கனி - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்
கண்ணனெனும் நற்கனியைக் காசினியில் தந்தீரே
தண்ணொளியாய் எங்களுக்குத் தானேநீர் – திண்ணம்
குமாரசாமி அங்கயர் கண்ணி குலவு
குமாரனைப் பெற்றீர் மகிழ்ந்து! 1
அகச்சுரப்பி யின்இயலுக் கும்நோய்க்கும் ஓ(ர்)இன்
தகவுடைய நன்மருந்தாய் கண்ணா – முகவிருந்தாய்
என்றும் இருக்கின்றாய் எந்நாளும் எல்லோர்க்கும்
நன்றுசெய்தே வாழ்க இனிது! 2