சொல்ல மறந்த காதல்

7 அதிசயங்களும் உன் காலுக்கு அடியில் தான்
என் அன்னையின் பாசத்தை உன்னிடத்தில் கண்டேன்
அப்பாவின் அன்பை உன்னிடத்தில் பார்த்தேன்
நீ ஒரு நிலா தேவதை
நான் உன்னை விரும்புகிறேன் என்று
உன்னிடம் கூட சொல்ல எனக்கு தைரியம் இல்லை .........
இருப்பினும் ........
ஒருநாள் சொல்லுவான் என்று எண்ணி
தினமும் என்னிடம் தோற்கின்றன .......
இன்று எத்தனை ரோஜா பூக்கள் பூத்து இருக்கின்றன என எண்ண வரும் என்னை பார்த்த
என் தோட்டத்து ரோஜா செடிகள் ...............
பின்பு தான் எனக்கு புரிந்தது
நான் காதலை சொல்ல மறந்தது
என் தோட்டத்து ரோஜா பூவிடம் மட்டும் அல்ல
என் மனதில் இருக்கும் ரோஜா மகளிடமும் தான் என்று ..................

எழுதியவர் : பொன்மொழி (7-May-15, 12:30 pm)
பார்வை : 108

மேலே