உயிரே உனக்காக

உன்னை நம்பி ஏமாந்ததால்
உன்னை சபிப்பேன் என
நினைத்து கொள்ளாதே....

நீ என்னை ஏமாற்றி இருக்கலாம்
நான் ஒரு போதும் உன்னை ஏமாற்றியது இல்லை........
ஒரு நொடி கூட உன்னை ஏமாற்றலாம் என்று நினைத்தும் இல்லை......

என்னை ஏமாற்றியது நீ மட்டுமே.......

அன்பே நீ நலமுடன் இருக்க....
நான் எப்பொழுதும் இறைவனிடம் வேண்டி கொண்டே இருக்கிறேன், என்னை ஏமாற்றியதால் இறைவனிடத்தில் உனக்கு தண்டனை வந்துவிடுமோ என்று பயந்து......
என்னால் நீ கஷ்டபடுவதை பார்க்க முடியாது...

உன்னால் நான் கஷ்டப்பட்டுவிட்டேன் அதை நீயும் பார்த்துவிட்டாய்.......

என்னால் நீ கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்று நான் இறைவனிடத்தில் வேண்டுகிறேன் உனக்கே தெரியாமல்................

எழுதியவர் : சைனுல் பானு.......... (7-May-15, 1:34 pm)
சேர்த்தது : சைனுல் பானு
Tanglish : uyire unakaaga
பார்வை : 108

மேலே