முதல் பூ

உன்னுள்
பூத்த முதல் "பூ" வை
நீ மறந்துவிட்டாய்
அதற்கு பின் ஆயிரம் "பூக்கள்" உன்னில்
விருப்பங்கள் மாறும்போது
விரும்புவர்கள் யார் என்று
உன் விருப்பத்தை பொறுத்து அமைகின்றது
விருப்பமில்லா
உன் விருப்பத்தை நான் விருப்பவில்லை........
இப்படியொரு
திருப்பம் இருக்கும் என்பது
தெரிந்திருந்தால்
அந்த முதல் "பூ" வாக
நான் இருந்திருக்க மாட்டேன்........
கண்கள்
ரசித்த காட்சிகள் ஆயிரம் ஆயிரம்
ஆனால்
அதில் கண்களை ரசித்த கண்கள் சில........
இன்று
கண்களை இலகின்றேன்,
நாளை...............

உன்னை விட்டு
நான் பிரிகின்றேன்.......

இதற்கு பின்
நீ "தனிமையில்" மட்டும்
இருந்துவிடாதே........

தனிமை
என்னுடைய முதல் பார்வையை
தேடசொல்லும் ............

உன் நினைவில்
வர வேண்டும் என்பதற்காக உன்னை
விட்டு பிரிகிறேன்.............

எழுதியவர் : priyajose (7-May-15, 3:21 pm)
Tanglish : muthal poo
பார்வை : 695

மேலே