நீ வளர்த்த தீ

கண்ணுறக்கம் கெடுக்கின்ற
கனவாக ஏன் வளர்ந்தாய்...!

நெஞ்சிற்குள் நெருப்பெரியும்
நினைவுகளில் ஏன் நிறைந்தாய்...!

நீ வளர்த்த நினைவுகளை
தீ வளர்த்தி கொளுத்திடவா...!

பாறை மீது உருகியதோர் பனி நீராய்
பாதையின்றி போன பயணம் வலிக்கிறது.

எழுதியவர் : parkavi (7-May-15, 8:19 pm)
Tanglish : nee valartha thee
பார்வை : 185

மேலே