கிறுக்கு உளறு

எண் எடு தொடு
வரி விதி என்ன
பண்ண என்று யோசி

கதா கிதா சதா
உன் ஞாபகம் என
உளறு

காக்கா கீக்கா
ரொட்டி பட்சி
என கிறுக்கு

தொகு பகு விலக்கு
நீ நான் அன்பே
வனம் கிழக்கு
மண்டையை உடைத்துக்கொள்.

நிலா பாவம்
உன்னிடம்
மாட்டிக்கொண்டு
கதறட்டும்.

உன்னால்
மொழிக்கு காக்காய்
வலிப்பு வந்து இழுக்க
கூகுளில் சாவியைத் தேடு.

கடுதாசி கடிதம்
பாட்டு மானே தேனே
எதையாவது போட்டுக்கொள்.

மரகதம் மழை சிவப்பு
காற்று தென்றல் என
பைத்தியக்காரனாகு.

செல்பேசி கணிணி
எல்லாத்ததையும்
உரசு தட்டு.

எதுவுமே வேலைக்கு
ஆகவில்லை எனில்
ஆட்டயப்போட்டு
மனப்பாடம் செய்.

அவள் முன்னால்
சென்று நில்.

அக்கு வேறு ஆணி வேறாக
பிய்ந்துப் போகும் சொற்கள்
இக் கவிதையைப் போலவே.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-May-15, 10:38 pm)
பார்வை : 127

மேலே