படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை -எனை மீட்டுவாயா

எனை மீட்டுவாயா?

(நீண்ட மௌனத்திற்க்குப் பின்
தலைவன் தனைமறந்து பாடுகிறான்)

வெண்மாலைப் பொழுதில்
கரு வானங்களுக்கு மத்தியில்
வெண்ணிலவாய் வீற்றிருக்கும்
பொலி முகத்தில்
கொலு வீற்றிருக்கும் விழியிரண்டினை
என்னவென்று சொல்வேன்!

வேந்தழலென்று சொல்வேனா
தண் நிலவென்று சொல்வேனா
குளுகுளுப்பிலும் ஓர் சுவாலையை
மூட்டி விடுகிறதே அதன் பொருள்தான்
என்னவோ?

வயலின் ஏந்தி நிற்கும்
என் வேல்விழியே..
என்னை மீட்டு உன் விரலால்
ஊனை உருக்கி உன்னில்
கலப்பேன் இசையாய்!

எழுதியவர் : கோ. குப்பன் (9-May-15, 4:46 pm)
பார்வை : 84

மேலே