காவியமானவள்-பகுதி5

விடியற்க்காலை ஐந்து மணி ஆனந்தின் அண்னை எழுந்து கந்தர் சஷ்டி பாடலை ஒலிக்கச் செய்து மராமத்து பணிகளை செய்து கொண்டிருந்தாள்...
தன் மனைவி எழும்போதே தன்னையும் எழுப்பச் சொல்லி நடைபயிற்ச்சி மேற்க்கொள்வார் ஆனந்தின் அப்பா சேகர்...
அன்றும் வழக்கம் போல் எழுந்து வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் அப்பால் உள்ள பள்ளி திடலில் நடைபயிற்ச்சி மேற்க்கொள்ள கிளம்பிவிட்டார்...
வீடு முழுவதும் கந்தர் சஷ்டி பாடலால் பக்தி மனம் வீசியது...
ஆனந்தின் அறையில் மட்டும் நிசப்தம் நீடித்தது...
தமிழ் நீ ஏன் நேற்று அப்படி பார்த்தனு தெரியல,
ஆனா அந்த பார்வை என் மனதை காயப்படுத்தி விட்டது...
நான் நானாக இல்லை இத்தணை நாள் எனை நாணன்றி வேறு எவரும் எனை ஆட்சி செய்ததில்லை...
இன்று என் மனமே என் கட்டளைக்கு இணங்க மறுக்கிறது...
உன் அழகு முகத்தை மட்டுமே காட்சிக்கு காட்டுகிறது...
இது தவறென்று பல முறை தலையில் கொட்டி சொல்லிவிட்டேன் அனைத்தும் தோல்வி...
வேண்டாம் தமிழ் காதல்...
இத்தணை நாள் உன் அம்மா என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச்சொல்கிறாயா?
தமிழ்,உள்ளமும் உள்ளமும் இணையும் அற்ப்புத நிகழ்வே காதல்...
வயது மாற்றக் கோளாறால் உண்டாகும் இணக்கவர்ச்சி காதலன்று...
நீ என் மேல் கொண்டதும் அப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது...
வேண்டாம் தமிழ் காதல்...
பளாரென அறைந்ந ஒலி செவியைப்பிளந்தது போலும்...
சட்டென்று கண் விழித்தான் ஆனந்த்...
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து கண்டது கனவென நிம்மதி கொண்டான்...
ஆனாலும் கண்டது விடியற்க்காலை கனவாயிற்றே எங்கே பலித்துவிடுமோ என்ற கவலை தொற்றிக்கொண்டது மனதில்...
தமிழை இனி சாதாரணமாக சந்திக்க முடியுமா ஒருவித குற்ற உணர்ச்சி மனதில் ஊசியாய் குற்றுமே...
இப்படிப்பட்ட எண்ணத்தோடு ஆன்டியின் முகத்தை எப்படி பார்த்து பேசுவேன்,என பலவிதமாக தனக்குத்தானே பிதற்ற ஆரம்பித்தான்...
சரி தமிழிடம் மனதில் இருப்பதை சொல்லிவிடலாம் என இறுதியில் முடிவெடித்து மனம் தெளிந்தான்...
அம்மா,என அழைத்தவாறே படுக்கையரையை விட்டு வெளியேறினான் ஆனந்த்...
வா,ஆனந்த் எழுத்துட்டயாடா முகம் கழுவிக்கிட்டு அலமாரியில் பனம் வச்சிருக்கேன் எடுத்துகிட்டு போய் பால் வாங்கிட்டு வா காஃபி போட்டுத் தருகிறேன் என சமயலரையில் பாத்திரம் தேய்ந்துக்கொண்டவாறே குரல் எழுப்பினாள் மலர்...
சரிம்மா,போய்ட்டு வரேன் என முகம் கழுவிக்கொண்டு அலமாரியில் பனத்தை தேடலானான் பனம் கிடைக்கவில்லை...
இறுதியில் அம்மா நீயே வந்து எடுத்துத்தா இங்க பனம் இல்ல என்று மறு குர் எழுப்பினான் ஆனந்த்...
ஓ!ஆமா டா அப்பா தினசரி பேப்பருக்கு பனம் கட்ட வேணும்னு எடுத்துட்டு போறதா சொன்னாரு எடுத்து போய்ட்டார் போல...
இரு மிளகு டப்பாள வச்சிருக்கேன் எடுத்துதரேனு சொல்லி பனத்தை கொண்டு வந்து கொடுத்தாள் மலர்கொடி...
பனத்தை பெற்றுக்கொண்ட ஆனந்த் விறுவிறுவென நடக்களானான் தனது மிதிவண்டையை மறந்து...
காலையில் எப்போதும் மிதிவண்டியில் தான் சென்றுவருவான் நல்ல உடற்பயிற்சி என்றும் உரைப்பான் அப்படியானவன் மறந்து போகும் அளவிற்க்கு மாயக்காரி மனதை
மை இட்டு மயக்கிவிட்டாள் போலும்...
மழை பொழியும் நாள் தவிர்த்து மற்ற அனைத்து தினங்களிலும் மார்கழி தை என்பதையெலலாம் பாராமல் வாசலை அழங்கரிக்காமல் விட்டதில்லை தமிழ்...
காலை ஐந்து மணி பதினைந்து நிமிடத்திற்க்கெல்லாம் கனக்கச்சிதமாக எழுந்து கையில் தண்ணீர் வாளி,தொடப்பம்,
கோலமிட பச்சரிசி மாவென நான்கையும் ஏந்தி வாசல் வந்துவிடுவாள் சுமார் இருபது நிமிடம் அளங்கரிப்பாள் வாசலை...
என்ன ஒரு கொடை உள்ளம் பாருங்கள் மனிதர்க்கு மனிதர் உதவாது மனிதம் இழந்து வாழும் மானிடப் பிரவிகளுக்கு மத்தியில் உயிரிணங்கள் பசியாற பச்சரிசி மாவினால் கோலமிடும் குணம் கொணைடவர்கள் எத்தணை பேர் இருக்க முடியும் விரல் விட்டு எண்ணினாலும் வேண்டாம் ஆட்காட்டி விரலை நீட்டியாவது குறிப்பிட ஒருவரேனும் உண்டா இவ்வுலகில்...
அன்றும் காலை வழக்கம் போல் நீர் தெழித்து வாசற்பெறுக்கி கோலமிட ஆயத்தமானாள்...
பதினொரு புள்ளிகள் உயரமும் பதினொரு புள்ளிகள் நீளம் என பக்குவமாய் பார்த்து பார்த்து வைத்துக்கொண்டிருந்தாள்...
தேவதையே வானிருந்து தரையிரங்கி வந்ததோ என வியக்க வைக்கும் தோற்றம்...
அவ்வேளையில் யாரோ பாதையில் நடந்து செல்லும் நிழல் புள்ளிகளுங்கிடையே உருவமாய் பதியச்செய்தது வீதியில் அனைந்து அனைந்து எறியும் மின்விழக்கு...
பார்வையை உயர்த்தினாள் மெல்ல உயர்த்தியவள் வேகமாக குணிந்துகொண்டாள்...
பார்க்கக் கூடாது என்றல்ல அவன் தன்னை கடந்து செல்வானா இல்லை கலாய்த்துச் செல்வானா என பார்க்கவே...
விறு விறுவென வீட்டை விட்டு வெளியேறியவனின் கால்கள் தமிழினியின் வீட்டை கடக்கும் போது மட்டும் வேகத்தை குறைத்துக்கொண்டது...
காதல் வந்துவிட்டாள் உடலில் உள்ள ஓர் அணு கூட உடையோனின் கட்டளையை மதிக்காது என்பது உண்மைதான்...
வேகத்தை குறைத்த கால்கள் ஏனோ நில்லாது மெல்ல கடக்கவேச் செய்தது...
ஆனந்த் மௌனமாக தமிழை கடக்க முற்பட்டான்...
தமிழினி புரிந்துகொண்டாள் தன்னை கடக்கத்தான் முற்ப்படுகிறானென...
தமிழ் மௌனம் கலைத்தாள்
கடந்து செல்பவனை மெல்ல பெயர் சொல்லி அழைத்தாள் காதில் விளவில்லையா இல்லை விளாதது போல் நடிக்கிறானா என தமிழிற்க்கு புழப்படவில்லை...
மறுமுறை அழைத்தான் பதிலேதும் இல்லை...
கோபம் மூண்டாள்
எனினும் கட்டுப்படுத்தி
கோலமதை முழுவதும் முடித்து வீட்டினுள் நுழைந்தாள்...
நடந்த யாவையும் அம்மா தமிழரசியிடம் கூறினாள்...
சரி விடும்மா எங்கப்போயிட போரான் வரும்போது கேட்கலாமென சமாதானப்படுத்தினாள் தமிழினி அம்மா...
அம்மாவின் சமாதாப்பேச்சிற்க்கு இணங்கி காலை உணவு சமைக்க அடுப்பரை புகுந்தாள் தமிழினி...நேரம் கடந்தது எட்டு மணி ஒலி எழுப்பியது சுவற்கடிகாரம் அரசாங்க ஊழியன் பத்துமணிக்கு அலுவலகத்தில் இருக்கவேண்டுமென்பது போல் கட்டிட பணியாளர்கள் எட்டரை மணிக்கே பேருந்து நிலையம் சந்திப்பிற்க்கு ஆஜராகி விட வேண்டும் உண்டும் உண்ணாலும் கிளம்ப நேரிடும்...
காலை உணவை தயார்படுத்திய தமிழ் அம்மாவை அழைத்தாள் சாப்பிட...
இல்லையடி நேரமாகிடிச்சு டிபன்பாக்ஸ்ல் போட்டு கொடு அங்க போய் சாப்டுக்கிறேன் கொஞ்சம் நேரம் ஆனாலும் மேஸ்திரி வேறொரு ஆளை வேலைக்கு எடுத்துக்கொள்வார் என சொல்லி இரண்டடுக்கு டிபன்பாக்ஸ்ல் உணவை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் தமிழரசி...
ஆனந்தும் தன் அப்பாவை வழியணுப்பிவிட்டு வீட்டு மரத்தடியில் சிந்தணையில் ஆழ்ந்தான்..
சிந்தையில் தமிழ் தோன்றிருப்பாளா????
சிந்தை மறக்கச் செய்திருப்பாளா?
காத்திருங்கள்...
-காவியமாவாள்

எழுதியவர் : கிருபானந்த் (10-May-15, 9:41 pm)
பார்வை : 257

சிறந்த கவிதைகள்

மேலே