மத்திய அரசில் பணியாற்றும் 90 சதவீத விஞ்ஞானிகள் மக்களுக்கும் சமூகத்திற்கும் எதிரானவர்கள்என்பதற்கு இந்த மீனாகுமாரி அவர்களின் பரிந்துரையே சான்று
மத்திய அரசில் பணியாற்றும் 90 சதவீத விஞ்ஞானிகள் மக்களுக்கும் சமூகத்திற்கும் எதிரானவர்கள்....என்பதற்கு இந்த மீனாகுமாரி அவர்களின் பரிந்துரையே சான்று....!
டாக்டர் மீனாகுமாரி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையையும் ஆணையத்தின் பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளதைத் தொடர்ந்து,
அந்தப் பரிந்துரைகள் அனைத்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கிடும் வகையில் அமைந்திருப்பதால் அதனை எதிர்த்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பரிந்துரைகள், இந்திய நாட்டு மீனவர்களின் வாழ்க்கைக்கு உதவிட வழி வகுக்காமல்........
வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு இந்தியக் கடல் செல்வம் அனைத்தையும் தடையின்றித் தாரை வார்த்திடும் வகையிலே அமைந்துள்ளன என்று சொல்லப்படுகிறது.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற மீனா குமாரி கமிஷன் அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன் என்று சொன்னார் திமுக தலைவர்........
இந்த வேண்டுகோள்களை ஏற்று, மத்திய அமைச்சர்கள் மற்றும் கடற்பகுதியைச் சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய மத்திய அரசு,
மீனாகுமாரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களையும், யோசனைகளையும் முற்றாக நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த ஆக்கப் பூர்வமான முடிவினைத் திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என்றார் திமுக தலைவர்.......
படத்தில் உள்ளவர் தான் விஞ்ஞானி மீனா குமாரி அவர்கள்...CMFRI - ல் பணிபுரிகிறார்.....
இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தினர் தான் இந்த மீனா குமாரியின் பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்....
- சங்கிலிக்கருப்பு -