விதியின் சதி

அம்மா இன்று கல்லறை கூட,
கருவறை ஆகிறது எனக்கு....

உன்னுடனே இருந்து பழகி விட்ட எனக்கு...,
வேறு எங்கும் செல்லத்தெரியவில்லை...

எப்போது அம்மா என்று அழைத்தாலும் உடனே
ஓடி வருவாய்....
இப்போது ஓயாமல் அழைக்கிறேன்...
நீயும் வரவில்லை...
அப்பாவிடம் கூறினாலும் எந்த பதிலும் இல்லை...

உங்கள் அருகிலேயே படுத்து இருக்கிறேன்...
என்றாவது எழுந்து என்னை பார்ப்பீர்கள் என்று...

உங்களோடு வாழ்வதற்குத்தான் எனக்கு கொடுத்து வைக்கவில்லை....
உங்களோடு சாவதற்க்குமா கொடுத்து வைக்கவில்லை...

இது தான் விதியா..?
விதியின் சதியா?

எழுதியவர் : JAKIR (14-May-15, 8:55 am)
சேர்த்தது : JAKIR
Tanglish : vithiyin sathi
பார்வை : 112

மேலே