தாய்மடிதான் யார் தருவார்
இதயத்தின் வலி கேட்டால்
அவள் நினைவகளில் வரிபறிப்பன்
இப்பாலகனின் வலிசொல்ல
எங்கு சென்று வரிபரிப்பேன்
எப்படி நான் கவி தரிப்பேன்
உடல் காயம் பட்டிருந்தால் மருந்திட்டு ஆற்றிடலாம்
இவன் உள்ளம் பட்ட காயத்தினை
எதைக்கொண்டு நாம் ஆற்ற?
அழைத்து வந்து அன்னமூட்டி அன்புமடி கொடுத்தாலும்
தாய்மடிக் கேட்பானே அதற்கு நான் என்ன செய்ய?
போருக்கு வித்திட்ட பேடிக்கும் தெரியட்டும்-அவனை
பிடித்துவந்து காட்டிடுங்கள் பிள்ளைவழி புரியட்டும்
பஞ்சுமெத்தை தூக்கத்திலே தினமுமவன் திளைத்திருப்பான்
இப்பாலகனின் வலியெல்லாம் அவனெங்கே அறிந்திருப்பான்
கண்தூங்கும் கடவுளெல்லாம் கண்திறந்தால் ஆகாதோ
மண்ணுறங்கும் சிறுவனின் மருட்சி நீக்க கூடாதோ
தெய்வங்கள் இருப்பதானால் மனமிறங்கி வாருங்கள்
மண்ணுறங்கும் பாலகனின் மனநிலையை மாற்றுங்கள்
அன்னை தந்தை மடிக்கேங்கும் அப்பாலகனை பாருங்கள்
ஆயுள்வரை அவனுக்கு நெஞ்சுரத்தை தாருங்கள்
போருக்கு வித்திடும் பேடியெல்லாம் கவனியுங்கள்-உங்கள்
புத்தியெல்லாம் கொண்டுபோய் மண்ணினுள் புதையுங்கள்