தவம் செய்யவில்லையே
தவம் செய்யவில்லையே
நான் தவம் செய்யவில்லையே
உனக்காக நான் தவம் செய்யவில்லையே
நான் தவம் செய்யாததால் வரமாக நீ கிடைக்கவில்லையே.......
என்னவளே,
காதல் இடி இடித்ததில், உன் கண் பார்வை
மின்னல் தாக்கலில் சிதறிப்போனதால்
உன் அன்பெனும் மழையில் நனைய
நான் தவம் செய்யவில்லையே.......
நேற்று பார்த்து இன்று காதலித்து
நாளை உன் கைப்பிடித்த என் கனவெல்லாம்
நனவாக நான் தவம் செய்யவில்லையே.......
உன் மார்போடு முகம் புதைத்து
என் வேதனைகளை கண்ணீரால் வெளிப்படுத்தி
அதை உன் விரல்கள் துடைக்க
நான் தவம் செய்யவில்லையே.......
உன்னை நினைத்து, நான் எழுதின வார்த்தைகள்
எல்லாம் கவிதையானது என்கிறார்கள்
அதை வாசிக்க உன் கண்கள் கிடைக்க
நான் தவம் செய்யவில்லையே.......
முடிவேயில்லாத பயணத்தில்
நீண்டதொரு பாதையில் நம் பாதச்சுவடுகள் படிய
உன் விரல்க் கோர்த்து நடக்க
நான் தவம் செய்யவில்லையே.......
உன் இதயத்தின் ஓரத்தில், அதில் துடிக்கும் கீதத்தில்
ராகத்தின் சுரங்களாக குடியிருக்க
நான் தவம் செய்யவில்லையே.......
நான் வாழ கோடி ஜென்மங்கள் கிடைத்தாலும்
இந்த ஜென்மத்தில் உன்னில் வாழ
உன் காதல் வரமாக கிடைக்க
நான் தவம் செய்யவில்லையே.......
நான் செய்ய மறந்த தவமெல்லாம்
இனிமேல் செய்ய தொடங்குகிறேன்
இந்த பிறவி இல்லையென்றாலும்
மறு பிறவிலாவது நீ என்னை ஏற்பாய் என்ற நம்பிக்கையில்.......!!!!!!!
# ஏக்கத்தோடு காத்திருப்பேன்
நீ என்னை ஏற்கும் வரை #
# காதலில் விழவில்லை
காதலிக்க ஆசையுமில்லை #