கல்வியைக் கொள்
கல்லூரி வாழ்க்கை ஆனந்தமானது
நம்மை நாமே கொண்டு நடத்தும்
பக்குவம் அடையும் காலம்
நம் வாழ்வையும் நம் உயர்வையும்
தெரிவு செய்யும் காலம் கல்லூரிக் காலம்
சிலரின் வாழ்கையில்
காதலும் கல்வியும் கலந்து வரும் ,
சிலரின் வாழ்வில் கல்வி மட்டுமே,
கல்வி தனித்து வந்தால் மதிப்பு உயரும்
காதலும் சேர்ந்து வந்தால் பாதிப்பு உயரும்
காதல் எண்ணம் கலந்து விட்டால்
எதை செய்வது எப்படி முடிவு எடுப்பது
குழப்பத்தில் வாலிப ங்கள் திண்டாடும்
படிப்பை முடித்து விட்டு காதலிப்போம் என்றால்
பொறுமை இல்லை காதல் ரசனை குறைந்து விடும்
காதலர்கள் இடம் மாற வாய்ப்பும் உண்டு
பெற்றோரின் எண்ணம் தொட்டு விட்டால்
பயங்கரமும் குழப்பமும் ஆட்டிப் படைக்கும்
கல்வியில் கவனம் செலுத்தி வந்தால்
காதல் எண்ணம் பின் வாங்கி விடும்
எது நல்லது எது கெட்டது தெரிந்து கொள்ள
நேரம் போதாது ஆகையால் கல்லூரி வாழ்கை
மூன்று வருடமோ நாலு வருடமோ
அதை நல்ல படி கவனத்தில் கொள்ள வேண்டும்
போனால் திரும்பி வராதது வயதும் ஆர்வமும்
கற்க வேண்டிய வயதில் கற்று விட்டால்
வேண்டியது எல்லாம் தன்னாலே வந்து விடும்
காதலிப்பதும் அவசியம் தான்
அதை விட முக்கியம் கல்வி
கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு
காதலுக்கு காதலர் மட்டுமே சிறப்பு
காதலை மட்டும் கொண்டால் உழைக்க பிழைக்க
வழி வேண்டுமே உன் உழைப்பில் உன்காதல்
அன்புள்ள காதலர்கள் ஆனந்தமாய் வாழ்ந்திட
அயராத உழைப்பு வேண்டும்
அதற்க்கு கல்வி முதன்மை வாய்ந்தது
கற்றதன் பின் காதல் கொள்
பணம் இல்லை என்றால் மனிதன் எதுவும் இல்லை
பணம் சம்பாதித்துக் கொள்ள அடிப்பைத் தேவை கல்வி
இல்லாதான் இல்வாழ்வை இல்லாளும் தேடாள்