உஷார் வெள்ள-ரகு

பலவருடமாய்ப் பழுதாகிக் கிடந்த
பலசரக்கு ஆட்டோவுக்கடியில்
படுத்துக்கொண்டு
சற்றுமுன்பே நிறுத்தப் பட்ட
ஒரு காருக்கடி நிழலுக்கு
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
சக தெருநாய்களை
வேடிக்கை பார்க்கத் தொடங்கியது
"வெள்ள"
சண்டை முடிவுக்கு வரும் முன்பே
கெளம்பிப்போன காரைப் பார்த்துக்
குலைத்து நொந்து
திசைக்கொன்றாய்ச் சிதறின நாய்கள்
இப்போதும் உஷார் "வெள்ள"
போலிஸ் ஸ்டேஷன் வளாகத்தில்
பறிமுதல் செய்யப்பட்டக் காசிளிக் காருக்கடியில்
சொகுசாய்ப் படுத்திருந்தது !

எழுதியவர் : சுஜய் ரகு (17-May-15, 9:26 am)
பார்வை : 140

மேலே