உதிரும் ஆயுள்

வெகு காலமாய் கரையின்
ஓரத்தில் காத்துக் கிடக்கிறேன் ..

வெள்ளை நுறைத் ததும்பும்
அலையின் வரவில்

மணல் தின்ற காற்றுக்
குமிழ்கள் போக

கரையில் ஒதுங்கும்
ஒரு முத்துக்காக காத்து கிடக்கிறேன்

காலை நனைக்கும்
அலைகள் வந்து போகிறது

கால் அடியில் மணலை
பறிக்கும் சில அலைகள் வந்து போகிறது

முத்துக்கள் மட்டும்
முகம் காட்ட மறுக்கின்றது.

சூரியத் தட்டும் கடலுக்குள்
காணாது போய்க் கொண்டிருக்கிறது

இரவு வந்தால் கரையில்
முத்து வந்தாலும் தெரியாது

என் வாழ்கையும் இப்படித்தான்
முத்து உள்ளே கிடக்கிறது

நான் தேடி அடைவெதெல்லாம்
கிளிஞ்சல்கள்தான் மட்டுமே ...

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (19-May-15, 5:59 pm)
சேர்த்தது : krishnamoorthys
Tanglish : uthirum aayul
பார்வை : 58

மேலே