பதில் சொல் என் கணவா

நீ உருவானதும் ஒரு கருவறையில்தான்
நான் உருவானதும் ஒரு கருவறையில்தான்.
நீ நடந்த அதே புழுதிக்காட்டில்தான்
நானும் தப்பாது புழுதிக்கிளப்பினேன்.
நீ குடித்த அதே அமராவதி தண்ணீர்தான்
நானும் சுவையோடு குடித்தேன்.
உனக்கிருக்கும் அதே சிறகு கனவுதான்
எனக்கும் கொஞ்சம் கடினமாக.
உனக்கிருக்கும் அதே கடமையுணர்வுதான்
எனக்கும் கொஞ்சம் ஆழமாக.
உனக்கிருக்கும் அதே காதலுணர்ச்சிதான்
எனக்கும் சற்று வீரியமாக
உனக்கிருக்கும் அதே காமக்கிளர்ச்சிதான்
எனக்கும் அதிக ஆசையாக.
உனக்கும் கையிரண்டு, காலிரண்டு
எனக்கும் தான்
உனக்கும் மூளை ஒன்று, விழியிரண்டு
எனக்கும்தான்.
நீ சுவாசிக்கும் அதே நாசித்துளைப்போல
எனக்கும் அழகாகவே.

ஏன் எனக்கில்லை
நீ பறக்கும் அதே விமானப்பாதையும்
அதே ஆகாயத் தடமும்
ஏன் எனக்கில்லை. ?

நீ வளர்க்காத மயிர்வரிகள்
நான் வளர்த்திருக்கிறேன்.
உனக்கு வெடிக்காத நெஞ்சகசதை
எனக்கு மார்பகமாக.
உன் பிறப்பு உறுப்புக்கு ஒரு பெயர்
என் பிறப்பு உறுப்புக்கு ஒரு பெயர்.

ஒருத்துளி விந்துக்கொடுத்து
நீ ஆகிவிடுவாய் எளிதாக தகப்பனாய்
உன் விந்துவை கருவாக்கி
பத்துமாதம் சுமந்து பிரசவித்து
நான் மரணித்து பிறக்கிறேன் தாயாக.

உன்னை விட எனக்கே
அதிக வீரியம்
உன்னை விட எனக்கே
அதிக வீரம்
உனனை விட எனக்கே
அதிக பலம்
உன்னை விட எனக்கே
அதிக சாமர்த்தியம்.
உனனை விட நானே
நிஜக்கடவுள்

ஏன டா எனக்கில்லை
பெண்ணுரிமை.
சம உரிமை

கணவனே சொல்...
எனக்கான உரிமையை
நீ யார் கொடுக்க?
எனக்ககான சுதந்திரத்தை
நீ யாருடா தடுக்க ?


இப்படிக்கு,
இந்திய கிராமத்துப் பெண்.

எழுதியவர் : வியன் (20-May-15, 3:38 pm)
பார்வை : 132

மேலே