ஆளும் மானிடா அழிக்காதே

வாழ்வே
வளையங்களாக கைகளில் மாற
வரமாய் நம் பூமித்தாய் தாய்
வசந்த காலங்களை அள்ளியிறக்க
வார்த்தைகள் முழுதும் சிறைதான் மனதிற்குள்
வரலாற்றில் இடம் பிடிக்க
வக்குள்ள மனிதனின் வம்புக்கு இயற்கையே பலியாக
வற்புறுத்தலில் வாழ்கிற வனங்களும்
வாயை மூடி வாட்டம் அடையச் செய்கிறதே தம்மோடு எம்மையும்
வானநாடான் நச்சு வாயுவின் சீற்றத்தினால்
வான்கொடையை தர மறுத்து தவிப்பில்விட
வளம் குன்றும் நம் வையகம் வியாபாரம் செய்யுது
விவசாயின் காய்ந்த வயிற்றைப் பாராமல்
வறட்சியில் உலகமே உருவம் இழக்க
வளர்ந்தவன் ஊற்றைக் கூட விட்டு வைக்காமல்
உழைப்பாளியை நிரந்தர ஓய்வில் நிலை நிறுத்த
உயிரும் ஊசல் ஆடுகிறதே விதியின் கைகளில்
இயற்கையின் கருவினை அழிக்கும் ராணுவமாக
இன்றைய நிம்மதியை அழிக்கும் மானிடனே
அனுதினமும் உலர்ந்து போகும் நம்
எளிச்சியின் விடியல்களை அடைய முடியாமல்
இறப்புக்குள் தள்ளப்படுவது பல உயிர்கள் மட்டும் அல்ல
நமை சுமக்கும் இவ் வையகமும் தான்