என்னோடு இணைந்திடு-என் எல்லைகள் இழந்திட

உயிர்க்காதலே உதறாதே என்னை
உனைஎண்ணியே வாழ்கிறேன் என்னை...
விளித்தவனைச் சேராது
வளிபோகும் போக்கில்
வழித்தவறும் மழையை-
ஒழிய வசைபாடும்
மொழியறியா மழலையாய்
விழிபிதுங்கி அழுதிளைத்து
கனியாத கழனியிலே
மேனிச்செங் கழுநீரிறைத்து
வெள்ளாமை வேண்டிநிற்கும்
வெள்ளாளன்போல் வதைகிறேன்.....!
இருண்ட மேகம்
இதழ் விரிக்கும் இடிபோல்-
சட்டெனச் சிரித்து
உதழ் விரித்தென்
உயிர் பூப்பாயோ?
அன்றி
ஆழக்கடல் உறிஞ்சிய
அகங்கார ஆர்ப்பரிப்பாய்-
ஆணவ மொழிபேசி
அடாது பொழிந்துநீ
ஆண்என்னை மாய்ப்பாயோ?
எண்ணம் ஏதாகட்டும்-நீ
விண்விட்டு கரைந்திடு
இன்னமுத மழையாய்
என்னோடு இணைந்திடு-என்
எல்லைகள் இழந்திட

எழுதியவர் : காசி. தங்கராசு (24-May-15, 10:16 pm)
பார்வை : 140

மேலே