முகப்பேர்-நுங்கம்பாக்கம்
செல்பேசியில்
கொஞ்சியபடி
ஒரு இளைஞன்..
ஆங்கிலத்தில்
பதறியபடி
ஒரு இளம்பெண்..
பாதிகண் திறந்து
மீண்டும் தூங்கிவழியும்
குண்டு ஆசாமி..
பாக்கு உமிழ வசதியாக
சன்னலோரத்தில்
ஒரு நடுத்தர வயது..!
உட்கார்ந்திருந்த
இவர்களை கடந்து
இடம் தேடிக்கொண்டிருந்தார்
ஒரு கர்ப்பினிப் பெண்..
முகப்பேரிலிருந்து
அண்ணாநகர் வழியே
நுங்கம்பாக்கம் நோக்கி
அழுதபடி பயணித்தார்
வள்ளுவர்.
நிற்க அதற்குத் தக
என்று முடியும் குறளோடு..
--கனா காண்பவன்