புறப்படும் தருணம் -ரகு

மணற் சிற்பங்கள்
சரிய
சிறகடித்ததோர்க்
கடற்காகம்

சத்தமிலாமலும்
காது கிழிக்கிறது
காதலின் கரைதல்

வளையல் கைகள் பரப்பி
கொலுசுகள் தெரியப்
புடவையை
உயர்த்துகிறேன்

அலையென
வந்து
திரும்புகின்றன
அவன்
நினைவுகள்

நனைந்து பின்
சுவடுகள் வரைந்து
புறப்படும்
என் பாதங்களுக்குத்
தெரிந்திருக்கக்
கூடும்

தரைதட்டி
நிற்கும்
அவனின்
காத்திருத்தல்

எழுதியவர் : சுஜய் ரகு (26-May-15, 12:36 pm)
பார்வை : 205

மேலே