விடைகாணா விடயம்

..."" விடைகாணா விடயம் ""...

ஏதென்று புரியாத ஓன்று
தெரியாமலே பிடித்திருக்க
விடைகாண முடியாமலே
வீதியோரம் அலைந்திட !!!

தென்றலொன்று புயலாக
தேவையில்லா சலசலப்பு
சிதறிய கண்டித்துண்டாய்
தேகம் கிழித்துச்செல்ல !!!

இமைகள் இணையதுடிக்க
விழிகள் உறங்கமறுக்க
வழியும் கண்ணீரெல்லாம்
இதயத்தை நிரப்புகிறது !!!

நீ என்ற அகம்பாவத்தால்
நான் என்ற மரத்தினிலேறி
தான் என்ற ஆணவத்தால்
குதித்தே சொல்கிறாய் !!!

காலத்தின் கோலமிதுவே
கண்களை உற்றுநோக்கி
ஆரவாரமாய் பொய்களை
ரசித்திடும் அளவிற்கு !!!

உண்மைகளை ஊர்கேட்க
உரக்கவே சொன்னாலும்
ஊமையாகவே உலகமதை
கண்டுகொள்வதேயில்லை !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (26-May-15, 1:52 pm)
பார்வை : 51

மேலே