பனித்துளியாக

கொட்டுகின்ற மழை யாகக்
***குவலயத்தைக் கழுவ வல்லேன்!
சொட்டுகின்ற பனியைப் போலச்
***சொற்கொண்டு துடைத்துப் பார்ப்பேன்!
வெட்டுகின்ற மின்ன லாக,
***வெடிக்கின்ற இடியாய் யின்றிப்
பொட்டுவெடி போல வேனும்
***பொய்த்தூக்கம் கலையச் செய்வேன்!
====

நன்றி சாரலனுக்கே! +++++++

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (28-May-15, 10:18 am)
பார்வை : 91

மேலே