புறக்கணித்து வாழ

என்னவனே!

என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!

தேன்சிந்தும்
என் கன்னத்தின்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!

அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
பிரித்தெடுத்தேன்
லாவகமாக

இன்று
சட்டையைக் கழற்றுவது
போல என்னை நீ……
யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!

எழுதியவர் : (28-May-15, 1:47 pm)
பார்வை : 62

மேலே