கிராமமும் நகரமும்

என் கிராமம்
ஒத்தையடி பாதை
சல சலத்தோடும் ஆறு
வயல் வரம்பில்
சருக்கல் விளையாட்டு

வளர்ந்த மா மரம்
கல்லடித்து வீழ்த்தும்
வீரம்
அங்கொன்றும் இங்கொன்றும்
ஓலைக் குடிசைகள்

நட்சத்திரம் எண்ணிய படி
பாயில் புரள
தென்றல் வந்து தாலாட்டும்
சுகமான தூக்கம்

காலை கதிரவன் எழுப்ப
சோம்பல் முறித்த விழிப்பு
வீட்டுத் தோட்டத்தில்
விளைந்த மரக்கறி உணவு
நாளும் நேரமும் எங்களிடம்
குறையாத சுறுசுறுப்பு

என் நகரம்
கம்பளம் விரித்த பாதை
நாற்றம் வீசும் கழிவு வழி
கண்ணை குருடாக்கும்
கணினி விளையாட்டு

வளர்ந்த கட்டிடம் அதை
அண்ணாந்து பார்த்து
வியக்கும் வீரம்
சுவாசிக்க முடியாமல்
அருகருகே குடியிருப்புக்கள்

புரியாத பாடல் கேட்டபடி
பஞ்சணையில் புரள
பெயருக்கும் வராத
தூக்கம்

அலாரம் அடித்து எழுப்ப
சோம்பல் கொண்ட விழிப்பு
பெட்டியில் அடைத்து வரும்
புது வகை உணவு
நாளும் நேரமும் இங்கே
குறையாத சோம்பல்

எழுதியவர் : fasrina (28-May-15, 2:03 pm)
சேர்த்தது : fasrina
பார்வை : 76

மேலே