திரிபுராவில் அஃப்சா சட்டம் ரத்தாகிறதா அதனால் என்ன

திரிபுராவில் அஃப்சா சட்டம் ரத்தாகிறதா...? அதனால் என்ன...?
திரிபுராவில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக அமலில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் திரும்பப் பெறுவதாக அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் அறிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டதால்.......என்று பரிந்துரை செய்துள்ளார் முதல்வர் மாணிக் சர்க்கார்....
பல நூறு ஆண்டுகளாக இந்தியாவுக்கு வருகை புரிந்த பிரிட்டிஷார்
1942 - ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டு வந்த சட்டம் தான் இது....
பிறகு பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு சுதந்திரம் வழங்கி விட்டு..... தங்கள் நாட்டிற்கு சென்ற பிறகு, இந்தியாவை ஆண்ட காங்கிரஸார் 1952 - ஆம் ஆண்டு இந்த அருமையான சட்டத்தை திரும்ப கொண்டு வந்தார்கள்....
அப்புறம் படிப்படியாக இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வந்து நவம்பர் 1990 - ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கொண்டு வந்து அந்த நாட்டு மக்களுக்கு படு பயங்கரமான சுதந்திரங்களை அள்ளி அள்ளி வழங்கினார்கள்.....
சுமார் 25 ஆண்டு காலமாக ஜம்மு காஷ்மீர் மக்கள் சொல்லவே முடியாத அளவிற்கு இன்பங்களை இந்த சட்டம் மூலமாக அனுபவித்து வருகிறார்கள்.....
இந்த சட்டம் நல்லா வேலை செய்கின்ற காரணத்தால்.... தற்பொழுது இந்த சட்டங்களை
பல திருத்தங்களுடன் உலக நாடுகள் தேசிய பாதுகாப்பு ஆணையம் என்று கொண்டு வந்து விட்டார்கள்....
கருத்துக்கள் / எதிர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.....
- சங்கிலிக்கருப்பு -