சாக்கடை பருகும் ஜென்மங்களே இதை கொஞ்சம் கேளுங்கள் - உதயா

இரவும் பகலும்
அடிவாங்கி மிதிவாங்கி
பலர் உயிரினை அர்பணித்து
பல போராட்டங்கள கடந்து
என் முன்னோர்கள் பெற்றுதந்த
சுகந்திரமடா இது ....

தன்னலமின்றி
பேராசையின்றி
நாட்டு நலனை எண்ணி
நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த
தலைவர்கள் ஆண்ட தேசமடா இது ....

மாதம் மும்மாரி மழை பொழிந்து
மண்ணில் நீர்நிலைகள் ஊற்றாய் பெருகி
காணும் திசையெங்கும் பசுமை மயமாக
பஞ்சமின்றி பசியின்றி வளமோடு
வாழ்ந்த பூமியடா இது ....

இன்றோ ..
பேராசை பேய்களெல்லாம்
அரசியல் பெரும்புள்ளிகள்
ரோட்டில் கிடக்கும் எச்சையெல்லாம்
நாட்டில் பெரிய மனுஷன்கள்..

கண்ணெதிரே பெண்ணொருத்தியின்
தேகம் கந்தலாக்கப் பட்டாலும்
அதனைக் கண்டும் காணாமல் செல்லும்
மலம் உண்டு வாழும்
மக்கள் வாழும் தேசமாயிற்றே ...

காசு பணம் பார்த்தே
ஓட்டினை பதிக்கும்
பாதகர்கள் வாழும்
நாடாய் மாறியிற்றே....

இந்த கொடுமைகளை கண்டபின்னே
மண்ணில் தரையிறங்க மறுக்கிறாளே
என் தாய் மழை அவளும்

அநீதிகளை கண்டபின்னும்
தந்தை ஆதவனும்
ஆக்ரோசமாய் மாறிபோனானே

ஐயோ.. நான் என்ன செய்வேன்
என் பசுமை அரசிகள் வாழ்ந்த
என் தேசமெல்லாம்
பாலைவன நிலமாகி போகிறதே

மக்களுக்காக உழைக்கும்
காவல் துறையினரும்
அரசு அதிகாரிகளும்
இலஞ்சப் பெருசாளியாக
மாறிவிட்டனரே...

அடே மானங்கெட்ட மனிதர்களே
தாய்கொரு பிரச்சனை
என்றால் தான் துடிப்பாயா
தாய் நாட்டிற்கு பிச்சனை என்றால்
அதனை நினைக்கவும் மறுப்பாயா

மதிகெட்ட மடையனே
அங்கு பாரடா ..
சிறுவயது சிறுவனும்
அந்த பார்வையற்றவர்களுக்கு
உதவி செய்து செல்கிறான் ...

த்தூ.. நீ எல்லாம் ஒரு ஜென்மம்
தினமும் நீரைத்தான் குடிக்கிறாயா
இல்லை சாக்கடையை குடிக்கிறாயா
உன்னுடலில் ஓடுவது குருதியா
இல்லை அந்த கூவ ஆறா.......

அச்சிறுவனின் சிறுநீரை
வாங்கி கொஞ்சம் பருகும்
உமக்கு அப்போவாது
அறிவு வளருமா என்று பார்ப்போம்....
நம் தாய் நாட்டின் மீது
அக்கறை வளருதான்னு பார்ப்போம்

அடேய் நாய்களா
நாய்கூட ஒருவேளை உணவளித்தால்
நன்றியுடன் நம்காலையே சுத்துமடா
நீயோ உயிருக்கு அஞ்சி வாழும்
குப்பையில் வாழும் புழுவடா ....

அடா பாவி ...
உன் கூரிய விழிகளிரண்டும்
கொந்தளித்தால் ...
தொடருமா உம்கண்முன்னே
கொடுமைகாட்சிகள்..

ஆயிரம் யானை பிளிறியது போல்
உன் குரல் எழுந்தால்
இனி தலை தூக்கி ஆடுமா
அந்த அநீதி காட்சிகள்....

சிங்கத்தின் தோரணையில்
உன் கால்கள் நடையிட்டால்
இனி மண்ணில் பிறக்குமா
அரக்கர்களின் வம்சங்கள் ....

பணமின்றி ஓட்டளிக்கும்
நிலைவொன்றை நீ வளர்த்தால்
நாட்டில் ஊழல் செய்யும் பெருசாளிகள்
உருத்தெரியாமல் போகுமடா ...

பொறுத்தது போதுமடா
நீ பொட்டைதனாமாய் வாழ்ந்ததும் போதுமடா
இனி நீ பொங்கியெழுந்தால் பொங்கியெழுந்தால்
பாரே தூய்மை அடையுமடா .....

எழுதியவர் : udayakumar (30-May-15, 4:15 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 898

மேலே