மௌனத்தில் புதைந்து

மிகச்சாதூர்யமாக
கடத்தியிருந்தது
காலம் அச்சில நாட்களை..

மிகச் சாதாரணமாகவே
ஆகிவிட்டது அந்த
இறந்த காலங்கள்...

மிகச் சாதுவாகவே
என் வீட்டு கோபக்கார
செல்ல நாயும் இப்போது...

மிகச் சரிந்திருக்கிறது
சிலவற்றை தூசியாக்கும் சிரிப்பில்
என் மேல் உதடு..

மிகச் சாவகாசமாக
கோபம் வந்து புதைகிறது
ஒரு நீண்ட மௌனத்தில்....

மிக மிகச் சிந்திந்தபின்
எதிர்மறை முடிவுகளின் அச்சத்தால்
கை நழுவுகின்றன சில முயற்சிகள்..

மிகச் சிரமப்பட்டு
கிடைத்தது இந்த
இறப்புச் சான்றிதழ்...

மிகச் சுலபமாகவே
உயிர் விட்டுவிட்டார்
அப்பா....
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (30-May-15, 8:13 pm)
Tanglish : mounathil puthaindu
பார்வை : 145

மேலே